சினிமா துளிகள்

தடுப்பூசி போட தில்லுமுல்லா? நடிகை நிலா விளக்கம் + "||" + Vaccinate Actress Nila Description

தடுப்பூசி போட தில்லுமுல்லா? நடிகை நிலா விளக்கம்

தடுப்பூசி போட தில்லுமுல்லா? நடிகை நிலா விளக்கம்
நிலா என்ற பெயரில் கதாநாயகியாக நடித்துள்ள மீரா சோப்ரா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக நடித்துள்ள மீரா சோப்ரா, தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர். நிலா சில தினங்களுக்கு முன்பு முன்கள பணியாளராக பணியாற்றுவதாக போலி அடையாள அட்டையை கொடுத்து தில்லுமுல்லு செய்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக தகவல் பரவியது. அந்த போலி அடையாள அட்டையும், சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலாவை பலரும் கண்டித்தனர்.

இதற்கு விளக்கம் அளித்து நிலா கூறும்போது, “நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பி அதற்கான முயற்சி எடுக்கிறோம். நானும் அதற்காக முயன்று ஒரு மாதத்துக்கு பிறகு தடுப்பூசி மையம் ஒன்றில் எனது ஆதார் கார்டை மட்டுமே கொடுத்து பெயரை பதிவு செய்தேன். தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாகும் அடையாள அட்டை என்னுடையது அல்ல. அதில் எனது கையெழுத்தும் இல்லை. போலி அடையாள அட்டையை டுவிட்டரில் தான் முதலில் பார்த்தேன். இப்படி எனது போலி அடையாள அட்டையை பகிர்ந்துள்ள செயலை கடுமையாக கண்டிக்கிறேன். இப்படி போலி அடையாள அட்டையை எனது பெயரில் உருவாக்க என்ன கார ணம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏர் இந்தியாவின் 5 விமானிகள் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தடுப்பூசி போட வலியுறுத்தல்
ஏர் இந்தியாவின் 5 மூத்த விமானிகள் கடந்த மே மாதத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டு உள்ளது.
2. தடுப்பூசி போட மகளை அமெரிக்கா அனுப்ப பெற்றோர் மனு அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா தடுப்பூசிபோட மகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும் என பெற்றோர் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.