நடிகை பிரணிதா திருமணம் தொழில் அதிபரை மணந்தார்


நடிகை பிரணிதா திருமணம் தொழில் அதிபரை மணந்தார்
x
தினத்தந்தி 1 Jun 2021 3:58 AM IST (Updated: 1 Jun 2021 3:58 AM IST)
t-max-icont-min-icon

சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாகவும், மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுடனும் நடித்துள்ளார்.

அருள்நிதி ஜோடியாக உதயன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரணிதா. சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாகவும், மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் சூர்யாவுடனும் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக உள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரணிதாவுக்கும், பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் திடீர் திருமணம் நடந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக திரையுலகினர் யாரையும் அழைக்காமல் இருவீட்டு நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள இந்த திருமணம் நடந்து இருக்கிறது

திருமணத்தில் கலந்து கொண்ட ஒருவர் மணமக்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிறகே பிரணிதா திருமணம் பற்றிய தகவல் வெளியே தெரியவந்தது. இதுகுறித்து பிரணிதா உறவினர் தரப்பில் கூறும்போது, ''திருமணத்தை அதிமானோரை அழைத்து விமரிசையாக நடத்தவே பிரணிதா விரும்பினார். ஆனால் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவுவதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது குறைவான ஆட்களை வைத்து எளிய முறையில் திருமணத்தை முடித்துள்ளோம்'' என்றார். பிரணிதாவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
1 More update

Next Story