தேவாவின் இசையும், பாட்டும்...


தேவாவின் இசையும், பாட்டும்...
x
தினத்தந்தி 6 Jun 2021 5:03 PM GMT (Updated: 6 Jun 2021 5:03 PM GMT)

‘தேனிசை தென்றல்’ என்று ரசிகர்களாலும், திரையுலகினராலும் அன்புடன் அழைக்கப்படும் தேவா.

1986-ம் ஆண்டில் வெளிவந்த ‘மாட்டுக்கார மன்னாரு’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார், தேவா. ‘தேனிசை தென்றல்’ என்று ரசிகர்களாலும், திரையுலகினராலும் அன்புடன் அழைக்கப்படும் தேவா, இதுவரை 450 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னும் 5 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தேவாவுக்கு இப்போது இசையமைப்பதற்கு வரும் வாய்ப்புகளை விட, பாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.

சமீபத்தில் வந்த ‘கர்ணன்’ படத்தில், நான் பாடிய ‘‘மஞ்சனத்தி’’ பாடலுக்குப்பின், பாடுவதற்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

15 புதிய படங்களில் பாடுவதற்கு சம்மதித்து இருக்கிறேன்’ என்கிறார், தேவா.

Next Story