ஹன்சிகா நடித்த மஹா படத்துக்கு எந்த தடையும் இல்லை


ஹன்சிகா நடித்த மஹா படத்துக்கு எந்த தடையும் இல்லை
x
தினத்தந்தி 6 Jun 2021 5:18 PM GMT (Updated: 6 Jun 2021 5:18 PM GMT)

ஹன்சிகா நடித்த ‘மஹா’ படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என்று பட நிறுவனம் கூறியிருக்கிறது. இதுபற்றி அந்த நிறுவனம் மேலும் கூறியிருப்பதாவது.

‘‘சிம்பு, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள ‘மஹா’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. படம் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

மஹா படத்தின் மீது எந்த ஒரு தடையையும் சென்னை ஐகோர்ட்டு விதிக்கவில்லை. படத்தின் வெளியீட்டு தேதியை சரியான நேரத்தில் அறிவிப்போம். இன்னும் சில காலம் அவகாசம் அளிக்கும்படி, ரசிகர்களை கேட்டுக்கொள்கிறோம்.’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story