வில்லியாக நடிக்க விரும்பும் மீனா


வில்லியாக நடிக்க விரும்பும் மீனா
x

“எனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. சினிமா பார்வையாளர்களின் மன நிலை தற்போது மாறி இருக்கிறது.

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“எனக்கு வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. சினிமா பார்வையாளர்களின் மன நிலை தற்போது மாறி இருக்கிறது. முன்பெல்லாம் கதாபாத்திரம் தனது இமேஜுக்கு பொருத்தமாக இருக்குமா? என்று யோசிக்க வேண்டி இருந்தது.

ஆனால் இப்போது அப்படி இல்லை. நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். எனவேதான் எதிர்மறை கதாபாத்திரம் உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்.

பல வெற்றி படங்களை கால்ஷீட் பிரச்சினையால் தவற விட்டுள்ளேன். அது எனக்கு இப்போதும் வருத்தம் அளிக்கிறது. படையப்பா, தேவர் மகன் படங்களையும் தவற விட்டேன்.

அடிப்படையில் நான் ஒரு நடன கலைஞர். எனவே எனக்கு நடன காட்சிகளில் நடிக்க மிகவும் பிடிக்கும். பரதநாட்டிய கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. எனக்கு காதல் நகைச்சுவை கதையம்சம் உள்ள படங்கள் பிடிக்கும்.'' இவ்வாறு மீனா கூறியுள்ளார்.

Next Story