சினிமா துளிகள்

‘பாதுகாப்பு தொல்லை’ கொடுக்காத மும்பை கதாநாயகி! + "||" + Security Not harassing Mumbai heroine

‘பாதுகாப்பு தொல்லை’ கொடுக்காத மும்பை கதாநாயகி!

‘பாதுகாப்பு தொல்லை’ கொடுக்காத மும்பை கதாநாயகி!
‘லாக்கப்’ படத்தை அடுத்து நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார்.
காதல் கண்டிஷன்ஸ் அப்ளை படத்தில் மஹத் ராகவேந்திரா, சனா மக்புல்.
‘லாக்கப்’ படத்தை அடுத்து நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

‘‘அது என்ன...காதல் கண்டிஷன்ஸ் அப்ளை...?’’ என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் நிதின் சத்யா அளித்த பதில்:- ‘இது, முழுக்க முழுக்க காதல் படம். ஆனால், இதுவரை வராத காதல் கதை. பொதுவாக காதலுக்கு ‘ஈகோ’தான் வில்லனாக இருக்கும். அந்த வில்லன் இந்த படத்தில் இல்லை. தனது காதலை தெரிவிக்கும் கதாநாயகனிடம், கதாநாயகி சில நிபந்தனைகளை விதிக்கிறாள். அது என்ன நிபந்தனை? என்பதே கதை. கதாநாயகி திருச்சியில் இருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததும் காதல் பிரச்சினை குறுக்கிடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

மஹத் ராகவேந்திரா, மும்பை அழகி சனா மக்புல் இருவரும் காதல் ஜோடியாக நடித்துள்ளனர். ஆர்.அரவிந்த் டைரக்டு செய்திருக்கிறார். மும்பை நடிகைகள் என்றாலே பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புகளுக்கு வருவார்கள். சனா மக்புல் எப்படி வந்தார்? சனாவை பொறுத்தவரை பாதுகாப்பு படை கேட்டு தொல்லை கொடுக்கவில்லை. நான் கொடுக்கவும் மாட்டேன்’’ என்கிறார், நிதின் சத்யா.

தொடர்புடைய செய்திகள்

1. திருநாவலூர் அருகே வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
திருநாவலூர் அருகே வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
2. ஓட்டுப்பெட்டிகளுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
ஓட்டுப்பெட்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
3. வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
4. 5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டத்தில் மதுக்கடைகள் திறப்பு போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை
தமிழகத்தில் 5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடந்தது.
5. பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரம் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் விவகாரம் போலீஸ் டி.ஜி.பி.யிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.