சினிமா துளிகள்

தனுஷ் பட நாயகிக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் + "||" + Dhanush to the heroine Good luck

தனுஷ் பட நாயகிக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்

தனுஷ் பட நாயகிக்கு அடிக்கிறது அதிர்ஷ்டம்
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக வந்தவர், ரெஜிஷா விஜயன்.
கேரளாவில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியான இன்னொரு அழகி. ‘கர்ணன்’ படத்தின் வெற்றி, ரெஜிஷா மார்க்கெட்டை உயரமாக தூக்கி நிறுத்தி இருக்கிறது.

இவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி திரையுலகில் இருந்தும் பட வாய்ப்பு கள் வந்து குவிகிறது. அடுத்து இவர், கார்த்தி ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். சூர்யா ஜோடியாக புதிய படத்துக்காக அவருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

தொடர்ந்து அடிக்கிறது அதிர்ஷ்டம்!

கார்த்தி ஜோடியாக நடிக்கும் படத்தில், இன்னொரு கதாநாயகியாக ராசிகன்னாவும் இருக்கிறார். மித்ரன் டைரக்டு செய்கிறார்.