மறக்க முடியாத மடிப்பு அம்சா!


மறக்க முடியாத மடிப்பு அம்சா!
x
தினத்தந்தி 20 Jun 2021 5:58 AM GMT (Updated: 20 Jun 2021 5:58 AM GMT)

தமிழ் திரையுலகில் எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், மறக்க முடியாதவர், சிலுக்கு சுமிதா. அவருடன் மற்ற கவர்ச்சி நடிகைகளை ஒப்பிட முடியாது.

அந்த அளவுக்கு புகழ் கொடி பறக்க விட்டவர், அவர் ஒருவர்தான். அவரையடுத்துதான் அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகியோர் பேசப்பட்டனர். இவர்கள் காலத்துக்கு பின் பிரபலமான கவர்ச்சி நடிகை, விசித்ரா. இவர், ‘சின்னத்தாய்’ என்ற படத்தில் அறிமுகமானார். ‘தலைவாசல்’ படத்தில், ‘மடிப்பு அம்சா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் பேசப்பட்டார். அவரை ரசிகர்கள், ‘மடிப்பு அம்சா’ என்று அழைக்கிற அளவுக்கு பிரபலமானார். காமெடி கலந்த கவர்ச்சி நடிகையாக ஒரு புது ரூட்டில், விசித்ரா பயணித்தார். அவரை காமெடியும், கவர்ச்சியும் கலந்த குணச்சித்திர நடிகையாக காட்டியவர் சத்யராஜ். இவர் இயக்கிய ‘வில்லாதி வில்லன்’ படத்தில், விசித்ராவை குணச்சித்ர நடிகையாகவும் பார்க்க முடிந்தது. இதுகுறித்து விசித்ரா கூறும்போது, ‘‘என்னை எல்லோரும் கவர்ச்சி நடிகையாக பார்த்த நேரத்தில், சத்யராஜ் மட்டும்தான் திறமையான குணச்சித்திர நடிகையாக காட்டினார்’’ என்றார்.

வில்லாதி வில்லனுக்கு பிறகு விசித்ரா திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பெரும்பாலான நடிகைகள் மார்க்கெட் இழப்பது போல் விசித்ராவும் மார்க்கெட் இழந்தார். பல வருடங்களாக காணாமல் போன நடிகைகள் பட்டியலில் இருந்த அவர், இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சி மூலம் ‘சின்னத்திரை’ நட்சத்திரமாக (கலைச்சேவைக்காக) மறுபடியும் வந்து இருக்கிறார்!

Next Story