அன்பு செலுத்தும்படி அனுஷ்கா உருக்கம்


அன்பு செலுத்தும்படி அனுஷ்கா உருக்கம்
x
தினத்தந்தி 1 July 2021 11:52 AM GMT (Updated: 1 July 2021 11:52 AM GMT)

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உள்ள அனுஷ்காவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ளன.

திருமணத்துக்கு தயாராவதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் எப்படி வாழ வேண்டும் என்ற விவரங்களை அவர் சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அனுஷ்கா வெளியிட்டுள்ள பதிவில், “எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். அடுத்தவர்களை நேசிப்பதை நேரில் சொல்லுங்கள். எல்லாவற்றுக்கும் பதில் கருத்து சொல்லி வருந்தாதீர்கள். உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க உங்களால் ஆன முயற்சியை செய்யுங்கள். எல்லாவற்றிலும் நல்லதை அழகானதை தேடுங்கள். வாழ்க்கையில் முன்னேற முயற்சி செய்யுங்கள். நடந்துபோனதை நினைத்து வருத்தப்படாமல் புதிய ஆரம்பங்களை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டே இருங்கள். அதிகமாக ஆசைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நிறைய கனவுகளையும், லட்சியங்களையும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கவலையை யார் போக்குகிறார்களோ அவர்களுடன் நிறைய நேரத்தை கழியுங்கள். தற்போதையை சூழலில் உயிரோடு இருப்பதன் மூலம் நாம் எவ்வளவு அதிர்ஷ்டகாரர்கள் என்பதை நினைத்து பாருங்கள். வாழ்க்கை எவ்வளவு அழகாக உள்ளது என்பதை மறுபடி மறுபடி நினைத்து கொள்ளுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

Next Story