கமலின் 5 புதிய படங்கள்


கமலின் 5 புதிய படங்கள்
x
தினத்தந்தி 1 July 2021 12:24 PM GMT (Updated: 1 July 2021 12:24 PM GMT)

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் 2018-ல் வெளியானது. அதன்பிறகு அவர் அரசியலில் கவனம் செலுத்தியதால் படங்கள் வரவில்லை.

தற்போது அடுத்தடுத்து தொடர்ந்து 5 படங்களில் நடிக்க தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து வந்த இந்தியன்-2 படம் கோர்ட்டு வழக்கில் சிக்கி உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷயம் 2-ம் பாகத்தை தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்து நடிக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார். இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நதியாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 4-வது படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல். இது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் 5-வது படமாக வெற்றி மாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக புதிய தகவல் பரவி வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் முடிவானதும் படம் பற்றிய விவரங்களை அறிவிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆடுகளம், அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ள வெற்றி மாறன், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story