ரஜினி பட வாய்ப்பை இழந்து அழுத சதா


ரஜினி பட வாய்ப்பை இழந்து அழுத சதா
x
தினத்தந்தி 6 July 2021 6:28 AM IST (Updated: 6 July 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

ஜெயம் ரவி ஜோடியாக ஜெயம் படத்தில் நடித்து தமிழ் பட உலகில் அறிமுகமான சதா அந்நியன் படத்தில் விக்ரமுடன் நடித்த பிறகு முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இணைந்தார்.

ஜெயம் ரவி ஜோடியாக ஜெயம் படத்தில் நடித்து தமிழ் பட உலகில் அறிமுகமான சதா அந்நியன் படத்தில் விக்ரமுடன் நடித்த பிறகு முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இணைந்தார். எதிரி, வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலிவேசம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. இதனால் சிறிய படங்களில் நடிக்க தொடங்கினார். வடிவேலுவின் எலி படத்தில் சதா நடித்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். தற்போது கிட்டி பார்ட்டி என்ற தெலுங்கு படம் மட்டும் கைவசம் உள்ளது.

இந்த நிலையில் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை சதா நினைவு கூர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “ரஜினிகாந்தின் சந்திரமுகி படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இரண்டு முறை அந்த படத்தில் நடிக்கும்படி அழைப்பு விடுத்தனர். ஆனால் சில காரணங்களால் சந்திரமுகி படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. படம் வெளியான பிறகு அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து நான் பல தடவை அழுது இருக்கிறேன்'' என்றார். சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்றது. இதில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
1 More update

Next Story