சினிமா துளிகள்

கொரோனாவுக்கு இயக்குனர் பலி + "||" + To the corona Director killed

கொரோனாவுக்கு இயக்குனர் பலி

கொரோனாவுக்கு இயக்குனர் பலி
சில தினங்களுக்கு முன்பு சேதுராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனாவுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் பலர் ஏற்கனவே பலியாகி உள்ளனர். தற்போது  இன்னொரு மலையாள இயக்குனரும் உயிர் இழந்துள்ளார். அவரது பெயர் சேதுராஜன். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.

இவர் பல மலையாள படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார். எண்டே பிரியதாமம் என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சேதுராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி சேதுராஜன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. தான் இயக்கிய முதல் படம் திரைக்கு வரும் முன்பே சேதுராஜன் கொரோனாவுக்கு பலியானது மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.