பிரபல நடிகர் விவாகரத்து

இந்தி திரையுலகில் ஏற்கனவே ஹிருத்திக் ரோஷன் மனைவியை விவாகரத்து செய்தார்.
சமீபத்தில் நடிகர் அமீர்கானும், கிரண் ராவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இந்த நிலையில் தற்போது பிரபல இந்தி நடிகர் கமல் சதனாவும் விவாகரத்து செய்கிறார். இவர் 1992-ல் பெகுடி படத்தில் கஜோல் ஜோடியாக நடித்து பிரபலமாகி தொடர்ந்து நடித்தார். சில படங்களை இயக்கியுள்ளார்.
கமல் சதனாவுக்கும், ஒப்பனை கலைஞரான லிசா என்பவருக்கும் 2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கமல் சதனாவின் 21 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வருகிறது.
இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். கமல் சதனா மும்பையிலும், லிசா கோவாவில் உள்ள பெற்றோர் வீட்டிலும் வசிக்கின்றனர். இருவரும் விவாகரத்து செய்வதாக கமல் சதனா அறிவித்து உள்ளார். “மனிதர்கள் வளர்ந்து வெவ்வேறு திசைகளில் செல்கிறார்கள். எல்லா இடங்களிலும் இது நடக்கிறது. தற்போது எங்கள் வாழ்க்கையிலும் அது நடந்துள்ளது. நாங்கள் விவாகரத்து செய்து பிரிகிறோம்'' என்றார்.
கமல் சதனா மறைந்த பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான பிரிஜ் சதனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story