நடிகைகளுக்கு எதிராக அவதூறு சோனா காட்டம்

சமூக வலைத்தளத்தில் நடிகைகளுக்கு எதிராக அவதூறு பதிவுகள் வெளியாவதாக நடிகை சோனா கண்டித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது.
“சினிமா படங்களை பற்றியும் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் கதாபாத்திரங்கள் பற்றியும் விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதற்கு மாறாக நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி தவறாக பேசுவதை ஏற்க முடியாது.
எல்லோருடைய வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் என்னை உள்பட நிறைய நடிகைகளை தனிப்பட்ட முறையில் தவறாக பேசுகிறார்கள். நடிகைகளின் சொந்த வாழ்க்கை பற்றி விமர்சிக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது போன்று இழிவான கருத்துக்களையும் பதிவிடுகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். நான் சிவப்பு மனிதர்கள் படத்தில் நடிக்கிறேன். இதில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. கொரோனா 2-வது அலையில் நிறைய பேர் பாதித்தனர். இதனால் வெளியே வரவே பயந்தேன். தற்போது கொரோனா தடுப்பூசி போட்டு இருக்கிறேன்.’' இவ்வாறு சோனா கூறினார்.
Related Tags :
Next Story