பகைவனுக்கு அருள்வாய்: ஒரு கைதியின் கதை


பகைவனுக்கு அருள்வாய்: ஒரு கைதியின் கதை
x
தினத்தந்தி 16 July 2021 9:54 AM GMT (Updated: 16 July 2021 9:54 AM GMT)

‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘குட்டிப்புலி’, ‘சுந்தரபாண்டியன்’, ஆகிய படங்களில் உயிரோட்டமான கதாபாத்திரங்களில் நடித்த சசிகுமார், அடுத்து ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை அனீஸ் டைரக்டு செய்துள்ளார்.

படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

‘‘வாழ்க்கையில் தோற்றுப்போன விளிம்பு நிலை மக்களை பற்றிய கதை. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. பகைவனுக்கு அருள்வாய் என்று வேண்டுகிற பரந்த மனம் கொண்ட ஜெயில் கைதியாக சசிகுமார் நடித்துள்ளார். தைரியமான துணிச்சல் மிகுந்த பெண்ணாக பிந்துமாதவி, மென்மையான குணாதிசயம் கொண்டவராக வாணிபோஜன் ஆகிய இருவரும் நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், ஜெயப்பிரகாஷ் நடித்து இருக்கிறார்கள்.

இசைக்கு முக்கியத்துவம் கொண்ட படம், இது. ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.’’

Next Story