தெலுங்கு பட தயாரிப்பாளர்களிடம் அசின் விதித்த நிபந்தனைகள்


தெலுங்கு பட தயாரிப்பாளர்களிடம் அசின் விதித்த நிபந்தனைகள்
x
தினத்தந்தி 18 July 2021 1:33 AM GMT (Updated: 18 July 2021 1:33 AM GMT)

தெலுங்கு பட அதிபர்கள் மும்பை சென்று அசினை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களிடம், அசின் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார்.

மும்பை தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயான அசின், மீண்டும் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். இதையறிந்த சில தெலுங்கு பட அதிபர்கள் மும்பை சென்று அசினை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

அவர்களிடம், அசின் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். ‘‘இனிமேலும் நான் கதாநாயகியாகத்தான் நடிப்பேன். அக்காள், அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க மாட்டேன்...’’ என்பது அந்த நிபந்தனைகளில் ஒன்று.

‘‘தெலுங்கு ரசிகர்கள் உங்களை வயதான வேடங்களில் பார்க்க விரும்ப மாட்டார்கள்’’ என்று அந்த பட அதிபர்கள், அசின் தலையில் பெரிய ஐஸ் கட்டியை வைத்தார்களாம். அவர்கள் சொன்னதை நம்பி, அசின் தன்னை கவர்ச்சியாக படங்கள் எடுத்து சமூகவலை தளங்களில் பரவவிட்டு இருக்கிறார்.

Next Story