மனசாட்சி இல்லையா? ரசிகர்கள் மீது நடிகை கோபம்


மனசாட்சி இல்லையா? ரசிகர்கள் மீது நடிகை கோபம்
x
தினத்தந்தி 18 July 2021 11:59 PM GMT (Updated: 18 July 2021 11:59 PM GMT)

ஜெயம் ரவி ஜோடியாக பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால்.

தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது பரபரப்பானது. இந்த நிலையில் நிதி அகர்வாலை கோபப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. நிதி அகர்வால் பள்ளியில் படித்தபோது நீச்சல் உடை அணிந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அவர் ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படங்களை யாரோ வலைத்தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகிறார்கள். இதனால் கோபமான நிதி அகர்வால் கூறும்போது, “என்னுடைய குறிப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பகிரப்படுவதை பார்க்கிறேன். அந்த புகைப்படத்தை பகிர வேண்டிய அவசியம் இல்லை. மனசாட்சி உள்ளவர்கள் இந்த புகைப்படத்தை பகிரவே மாட்டார்கள். அது தேவை இல்லாதது'' என்று கூறியுள்ளார்.

Next Story