கொரோனா விதிமுறை மீறல், படப்பிடிப்பு நிறுத்தம்; படக்குழு மீது வழக்கு


கொரோனா விதிமுறை மீறல், படப்பிடிப்பு நிறுத்தம்; படக்குழு மீது வழக்கு
x
தினத்தந்தி 26 July 2021 1:03 AM GMT (Updated: 26 July 2021 1:03 AM GMT)

தமிழில் தனுசுடன் மாரி படத்தில் வில்லனாக நடித்தவர் டோவினோ தாமஸ். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். தற்போது பசில் ஜோசப் இயக்கத்தில் மின்னல் முரளி படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இதை சூப்பர் ஹீரோ படமாக எடுக்கின்றனர். அஜூ வர்கீஸ், குரு சோமசுந்தரம், ஹரிஶ்ரீ அசோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். கேரளாவில் கொரோனா ஊரடங்கை தளர்த்தி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மின்னல் முரளி படப்பிடிப்பும் தொடுபுழா அருகில் உள்ள குமாரமங்கலம் பகுதியில் நடந்தது. படப்பிடிப்பில் சமூக விலகலை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கிருமிநாசினியால் சுத்தம் செய்வது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் மின்னல் முரளி படப்பிடிப்பு நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் மின்னல் முரளி படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பை நிறுத்தினர். படக்குழுவினர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.

Next Story