குத்துச்சண்டை கற்கும் சுருதிஹாசன்


குத்துச்சண்டை கற்கும் சுருதிஹாசன்
x
தினத்தந்தி 1 Aug 2021 8:07 PM GMT (Updated: 1 Aug 2021 8:07 PM GMT)

கமல்ஹாசன் மகளும், நடிகையுமான சுருதிஹாசன் இசை, பாடல் என்று பிற திறமைகளையும் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது குத்துச்சண்டை பயிற்சியிலும் இறங்கி இருக்கிறார். தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் பயிற்சியாளரை வைத்து குத்துச்சண்டை கற்றுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார். பயிற்சியாளரை சுருதிஹாசன் சரமாரியாக அடித்து தாக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. சமீபத்தில் ஆர்யா நடிப்பில் குத்துச்சண்டையை மையமாக வைத்து தயாரான ‘சார்பட்டா பரம்பரை’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தை பார்த்து சுருதிஹாசனுக்கு குத்துச்சண்டையில் ஆர்வம் வந்து இருக்கலாம் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். சுருதிஹாசன் ஏற்கனவே விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. தியேட்டர்கள் திறப்பது தாமதமாவதால் ஓ.டி.டி.யில் லாபம் படத்தை வெளியிடலாமா என்றும் படக்குழுவினர் யோசிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகும் சலார் படத்தில் பிரபாஸ் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

Next Story