பிரபல பின்னணி பாடகி மரணம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபல சினிமா பின்னணி பாடகி கல்யாணி மேனன் வயது மூப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. கல்யாணி மேனன் தமிழில் 1979-ல் வெளியான நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே பாடலை பாடி அறிமுகமானார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.
சுஜாதா படத்தில் நீ வருவாய் என, முத்து படத்தில் இடம்பெற்ற குல்வாலிலே முத்து வந்தல்லோ, புதிய மன்னர்கள் படத்தில் வாடி சாத்துக்குடி, காதலன் படத்தில் இந்திரையோ இவள் சுந்தரியோ, அலைபாயுதே படத்தில் அலைபாயுதே, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஓமணப்பெண்ணே உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார். இறுதியாக 96 படத்தில் காதலே காதலே பாடலை பாடி இருந்தார். மலையாளத்திலும் ஏராளமான பாடல்களை பாடி இருக்கிறார். மறைந்த கல்யாணி மேனனுக்கு ராஜீவ் மேனன், கருணாகரன் மேனன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் ராஜீவ் மேனன் பிரபல ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.
Related Tags :
Next Story