சினிமா துளிகள்

புத்தகங்கள் படிக்க தூண்டும் ராஷ்மிகா + "||" + Rashmika inspires reading books

புத்தகங்கள் படிக்க தூண்டும் ராஷ்மிகா

புத்தகங்கள் படிக்க தூண்டும் ராஷ்மிகா
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமான ராஷ்மிகா தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இந்தி படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், “புத்தகம் படிப்பது மூளைக்கு பெரிய பயிற்சி மாதிரி. இதை விட சிறந்த பயிற்சி மூளைக்கு வேறு எதுவும் இருக்காது. நமது கற்பனை உலகத்துக்கான கதவுகளை அது திறந்துவிடும். பொறுமையாக மனது வைத்து படிப்பதனால் நமக்கு நேரம் போவது மட்டுமல்லாமல் மூளைக்கு தீனி போட்டமாதிரியும் இருக்கும். புத்தகங்களில் அனைத்து விதமான மனிதர்களை பற்றிய எல்லா விஷயங்களும் இருக்கின்றன. எனவே உங்கள் மனநிலைக்கு ஏற்ற புத்தங்களை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.

ஏதாவது கஷ்டம், வேதனை, மனது சரியில்லாத நிலைமை என்று சோர்ந்து போன நிலைகளில் நல்ல புத்தகங்கள் படியுங்கள். அதன் மூலம் உங்கள் வேதனைகள் எல்லாமே பஞ்சுமாதிரி பறந்து போய்விடும். புத்தகம் படிப்பது என்பது வேதனைக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது மாதிரி’’ என்றார்.