கொரோனாவில் மீண்ட நடிகை சரண்யா சசி மரணம்

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சரண்யா சசிக்கு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக கடந்த 10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்தார். கட்டியை அகற்ற அவருக்கு 11 தடவை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.
ஆனாலும் அவருக்கு வேறு சில உடல்நல பிரச்சினைகள் ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சரண்யா சசி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 35. சரண்யா சசி மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story