தனுஷ் படப்பிடிப்பில் விபத்து பிரகாஷ்ராஜுக்கு அறுவை சிகிச்சை

தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர் பிரகாஷ்ராஜ். தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார் குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கிறார்.
தற்போது தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்குகிறார். படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் தொடங்கியுள்ளது.
அங்குள்ள ஒரு வீட்டில் நடந்த படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் பங்கேற்று நடித்தபோது திடீரென்று கால் சறுக்கி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவரது இடது கை தோள்பட்டையில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றார்.
இது குறித்து பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “விபத்தில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள செல்கிறேன். நன்றாகிவிடும். கவலை வேண்டாம். என்னை நினைவில் கொள்ளுங்கள்'' என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story