‘விக்ரம்' படத்தில் கமல் ஜோடி ஆண்ட்ரியா?


‘விக்ரம் படத்தில் கமல் ஜோடி ஆண்ட்ரியா?
x
தினத்தந்தி 11 Aug 2021 11:42 AM GMT (Updated: 11 Aug 2021 11:42 AM GMT)

லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

கமல்ஹாசன், இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் இணைந்துள்ளனர். இருவரும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் ஜெயராம் மகன் காளிதாசையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகி யார் என்பதை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கோட் ரெட்' என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ளார். விக்ரம் படத்தின் முதல் தோற்ற போஸ்டரிலும் இதே வார்த்தைகளை குறிப்பிட்டு இருந்ததால் ஆண்ட்ரியாதான் கதாநாயகி என்று ரசிகர்கள் பேச தொடங்கி உள்ளனர். ஆனாலும் படகுழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே விஸ்வரூபம், விஸ்வரூபம் 2. உத்தம வில்லன் ஆகிய படங்களில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story