5 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்


5 புதிய படங்களில் சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 11 Aug 2021 11:57 AM GMT (Updated: 11 Aug 2021 11:57 AM GMT)

சிவகார்த்திகேயன் ஹீரோ படம் வெளியான பிறகு டாக்டர் மற்றும் அயலான் படங்களில் நடித்தார்.

டாக்டர் படப்பிடிப்பு முடிந்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் தேர்தல் மற்றும் கொரோனா காரணங்களால் தள்ளி வைத்தனர்.

தியேட்டர்கள் திறப்பது தாமதம் ஆவதால் ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சி நடப்பதாக தகவல். இதுபோல் அயலான் படமும் முடிந்துள்ளது. அடுத்து புதிதாக 5 படங்களில் நடிக்க உள்ளார்.

அதில் ஒரு படம் டான் என்ற பெயரில் தயாராகிறது. இதில் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன், காளிவெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்னொரு படத்தை அனுதீப் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல்.

இதையடுத்து அறிமுக இயக்குனர் அசோக் இயக்கும் படத்திலும், அதோடு மேலும் 2 புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

Next Story