ராஷ்மிகாவுக்கு அதிக ரசிகர்கள்


ராஷ்மிகாவுக்கு அதிக ரசிகர்கள்
x
தினத்தந்தி 11 Aug 2021 12:07 PM GMT (Updated: 11 Aug 2021 12:07 PM GMT)

தென்னிந்திய கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா இளைஞர்களுக்கு பிடித்த நடிகையாக மாறி உள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானார்.

தற்போது சமூக வலைத்தளத்தில் பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையில் ராஷ்மிகா மந்தனா முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 கோடி பேர் பின் தொடர்கிறார்கள். கடந்த மாதம் ஒரு கோடியே 90 லட்சம் பேர் பின் தொடர்ந்த நிலையில் ஒரு மாதத்தில் கூடுதலாக 10 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இதனால் அவர் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ராஷ்மிகாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் காஜல் அகர்வாலை 1 கோடியே 90 லட்சத்து 20 ஆயிரம் பேர் பின் தொடர்கிறார்கள். சமந்தாவை 1 கோடியே 80 லட்சம் பேரும், ரகுல்பிரீத் சிங்கை 1 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் பேரும், சுருதிஹாசனை 1 கோடியே 7 லட்சத்து 20 ஆயிரம் பேரும், கீர்த்தி சுரேசை 1 கோடி பேரும் பின் தொடர்கிறார்கள்.

Next Story