ராஜா, ராணி கதை 2 பாகங்களாக வரும் விஜய் சேதுபதி படம்


ராஜா, ராணி கதை 2 பாகங்களாக வரும் விஜய் சேதுபதி படம்
x
தினத்தந்தி 12 Aug 2021 9:47 AM GMT (Updated: 12 Aug 2021 9:47 AM GMT)

விஜய்சேதுபதி அனபெல் சுப்பிரமணியம் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக டாப்சி வருகிறார். இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ராதிகா, தேவதர்ஷினி, யோகிபாபு, சுப்பு பஞ்சு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ளார். திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இதன் பெரும்பகுதி காட்சிகளை ஜெய்பூரில் படமாக்கினர்.

படத்தில் சரித்திர காலத்தையும், இப்போதைய காலத்தையும் காட்சிப்படுத்தி இருப்பதாகவும், சரித்திர கால கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி மன்னராகவும், டாப்சி ராணியாகவும் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.

முழு படத்தையும் பார்த்த விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினருக்கு கதை மிகவும் பிடித்துள்ளது. இதனால் பெயரை இன்னும் ரசிகர்களை கவரும் வகையில் மாற்ற யோசிக்கிறார்கள். அதோடு படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடவும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story