பணம் கேட்டு மிரட்டி இசையமைப்பாளரை தாக்கிய கும்பல்


பணம் கேட்டு மிரட்டி இசையமைப்பாளரை தாக்கிய கும்பல்
x
தினத்தந்தி 13 Aug 2021 10:08 AM GMT (Updated: 13 Aug 2021 10:08 AM GMT)

ஜெய்சன் நாயர் கேரள மாநிலம் சேர்தலாவில் இருந்து எதுமனூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜெய்சன் நாயர். இவர் ஆன சந்தம், கத பரஞ்ச கத, அபி பேம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜெய்சன் நாயர் கேரள மாநிலம் சேர்தலாவில் இருந்து எதுமனூரில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டு இருந்தார்.

வழியில் போன் பேசுவதற்காக ஓரமாக காரை நிறுத்தினார். அப்போது ஒரு கும்பல் காரை சுற்றி வளைத்தது. காரில் இருந்த ஜெய்சனிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கினர். அவர் மறுத்ததும் கத்தியால் குத்த முயன்றனர். உடனே ஜெய்சன் நாயர் காரை வேகமாக ஓட்டி சென்று தப்பினார். இந்த சம்பவத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Next Story