இந்தி படத்தில் துல்கர் சல்மான்


இந்தி படத்தில் துல்கர் சல்மான்
x
தினத்தந்தி 13 Aug 2021 10:58 AM GMT (Updated: 13 Aug 2021 10:58 AM GMT)

துல்கர் சல்மான் 2012-ல் செகன்ட் ஷோ என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் 2012-ல் செகன்ட் ஷோ என்ற மலையாள படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். தமிழில், வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அவரது நடிப்பில் வந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை ரஜினிகாந்தே பார்த்து பாராட்டினார்.

தற்போது ஹேய் சினாமிகா என்ற தமிழ் படத்திலும், 3 மலையாள படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் துல்கர் சல்மானுக்கு அடுத்து இந்தி படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

இந்த படம் திகில் கதையம்சத்தில் தயாராகிறது. பால்கி இயக்குகிறார். இதில் சன்னிதியோல் கதாநாயகனாக நடிக்கிறார். பூஜா பட் நாயகியாக வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விரைவில் தொடங்க இருக்கிறது. பால்கி, சன்னிதியோல் கூட்டணியில் உருவாகும் இந்தி படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று துல்கர் சல்மான் தெரிவித்து உள்ளார்.

Next Story