பண கஷ்டத்தை சந்தித்த நடிகை


பண கஷ்டத்தை சந்தித்த நடிகை
x
தினத்தந்தி 18 Aug 2021 3:18 AM GMT (Updated: 18 Aug 2021 3:18 AM GMT)

தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் வாணி கபூர்.

தமிழில் ஆஹா கல்யாணம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் வாணி கபூர். இந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் வார் படத்தில் நடித்துள்ளார். அக்‌ஷய்குமாருடன் பெல்பாட்டம் படத்தில் நடித்துள்ளார். வாணிகபூர் அளித்துள்ள பேட்டியில், “நான் 18 வயதில் இருந்து எனது பெற்றோர்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கவில்லை. மாடலிங் செய்து அதில் வரும் வருமானத்தை செலவுக்கு வைத்துக்கொண்டேன். சொந்தமாக உழைத்து சம்பாதிக்கிறேன்.

சில விஷயங்களில் கண்டிப்போடு இருந்தேன். இதனால் எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. நான் வசதியான குடும்பத்தில் இருந்து வந்ததால் சந்தித்த அனுபவங்கள் புதுமையாக இருந்தது. நம்பிக்கையற்ற நிலையில் இருந்தேன். மன உறுதியால் வளர்ந்து தனித்து செயல்படும் திறனை பெற்றேன். பெல்பாட்டம் படத்தை தொடர்ந்து ஷாம்ஷேரா, சண்டிகார் கரே ஆஷிகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன்’’ என்றார்.

Next Story