2 தவணை தடுப்பூசி போட்ட நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று


2 தவணை தடுப்பூசி போட்ட நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 Aug 2021 8:49 AM GMT (Updated: 21 Aug 2021 8:49 AM GMT)

நடிகை நதியா லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நதியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுபோல் நதியாவின் அப்பா, அம்மா மற்றும் வீட்டு வேலைக்காரர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நதியாவும் மற்றவர்களும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

நதியா கடந்த மே மாதமே 2 தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டார். அதன் பிறகும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் நதியா நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்குவதை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். நதியா 1990-களில் தமிழ், மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு முதல் தவணை தடுப்பூசி போட்ட நடிகை ஷெரினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Next Story