பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை

பிரபல மேற்கு வங்க நடிகையான நுஸ்ரத் ஜஹான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பசீர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.
பிரபல மேற்கு வங்க நடிகையான நுஸ்ரத் ஜஹான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பசீர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். தேர்தலில் வென்ற பிறகு தொழில் அதிபர் நிகில் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் துருக்கியில் நடந்தது.
பின்னர் தனது கணவரை பிரிந்துவிட்டதாக நுஸ்ரத் அறிவித்தார். அவர் கூறும்போது, “எங்கள் திருமணம் இந்திய சட்டப்படி நடக்கவில்லை. இதனால் விவாகரத்து செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கணவரை நான் பிரிந்தது எனது சொந்த விவகாரம்'' என்றார்.
பா.ஜனதாவை சேர்ந்த நடிகர் யாஷ்தாஸ் குப்தாவை நுஸ்ரத் காதலிப்பதாக தகவல்கள் பரவின. இதற்கு இருவரும் விளக்கம் அளிக்கவில்லை. இந்த நிலையில் நுஷ்ரத் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கொல்கத்தா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நுஸ்ரத்துக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

Related Tags :
Next Story