ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா


ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா
x
தினத்தந்தி 16 Sep 2021 6:05 PM GMT (Updated: 2021-09-16T23:35:38+05:30)

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகா, ஆர்யா, விஷாலுக்கு போட்டியாக களமிறங்க உள்ளாராம்.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தயாரிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடித்துள்ளார்.

கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 13-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் விஷாலின் ‘எனிமி’, சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘அரண்மனை 3’ ஆகிய படங்களும் ஆயுதபூஜை விடுமுறையில் வெளியாக உள்ளது. தற்போது இப்படங்களுக்கு போட்டியாக ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ படமும் களமிறங்கி உள்ளது.

Next Story