8-வது முறையாக கூட்டணி சேர்ந்த பட நிறுவனங்கள்


8-வது முறையாக கூட்டணி சேர்ந்த பட நிறுவனங்கள்
x
தினத்தந்தி 17 Sep 2021 9:25 AM GMT (Updated: 17 Sep 2021 9:25 AM GMT)

தமிழ் திரையுலகில், ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன், சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டைன்மெண்ட் ஆகிய 2 பட நிறுவனங்களும் முன்னணி பட நிறுவனங்களாக உள்ளன.

இந்த 2 பட நிறுவனங்களும் இணைந்து இதுவரை அட்டகத்தி, சூதுகவ்வும், இன்று நேற்று நாளை, பீட்சா, வில்லா, காதலும் கடந்து போகும், இறைவி ஆகிய 7 படங்களை தயாரித்துள்ளன. 8-வது முறையாக மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றன. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கிராமத்து நகைச்சுவை படமாக இது தயாராகிறது. இந்தப் படத்தை வடிவேலு இயக்குகிறார். இவர், ‘அண்டாவ காணோம்’ படத்தை டைரக்டு செய்தவர்.

Next Story