சினிமா துளிகள்

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா? + "||" + Anushka in Chandramuki Part 2?

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?

சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?
பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார். மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.


‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நகைச்சுவை வேடத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகி இருப்பதாக வடிவேலு அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில் கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கு இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
2. சந்திரமுகி 2-ம் பாகத்தில் வடிவேலு
வடிவேலு கூறும்போது, “எனக்கு நடிக்க விதித்திருந்த தடை நீங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு மறுபிறவி, அடுத்து 5 புதிய படங்களில் நடிக்கிறேன்'' என்றார்.
3. சர்ச்சை கதையில் அனுஷ்கா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஓ.டி.டி, தளத்தில் வெளியானது.
4. துபாய் தொழில் அதிபரை மணக்கும் அனுஷ்கா?
ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அனுஷ்கா திருமணம் குறித்து தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்தன.