பிக்பாஸ் பிரபலங்கள் நடித்த 2 படங்கள்... நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்


பிக்பாஸ் பிரபலங்கள் நடித்த 2 படங்கள்... நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ்
x
தினத்தந்தி 19 Sept 2021 11:58 PM IST (Updated: 19 Sept 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

பிக்பாஸ் பிரபலங்கள் நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு படங்களும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்ட போதும் புதிய படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது.

இந்நிலையில், மேலும் 2 தமிழ் படங்கள் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஹரீஷ் கல்யாணின் ‘ஓமணப்பெண்ணே’, கவின் நடித்துள்ள ‘லிப்ட்’ ஆகிய படங்கள் ஓ.டி.டி ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த 2 படங்களின் ஹீரோக்களான கவினும், ஹரீஷ் கல்யாணும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ‘ஓமணப்பெண்ணே’ படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதேபோல் ‘லிப்ட்’ படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 More update

Next Story