நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு


நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு
x
தினத்தந்தி 20 Sept 2021 10:16 PM IST (Updated: 20 Sept 2021 10:16 PM IST)
t-max-icont-min-icon

செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தில் நடிகை மீரா மிதுன் பேயாக நடித்து உள்ளாராம்.

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு ‘பேய காணோம்’ என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி உள்ளார்.

வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். ஆனால் முதன் முதலாக இப்படத்தில் ஒரு பேயை தேடுகிறார்கள். அவர்கள் பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஏனெனில், இப்படத்தின் நாயகி மீரா மிதுன் சிறையில் உள்ளதால், படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் இதர 10 சதவீதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

1 More update

Next Story