சினிமா துளிகள்

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + Aishwarya Rajesh starring in Nelson

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்
நெல்சன் - ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கைவசம் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக், துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் ரிபப்ளிக், பீம்லா நாயக் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.


இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் எஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் உடன் கூட்டணி அமைக்க உள்ளார்.

இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் நெல்சன் உடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2. பீஸ்ட் அப்டேட் எப்போ ரிலீஸ் ஆகும்? - இயக்குனர் நெல்சன் விளக்கம்
நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
3. சுந்தர்.சி இயக்கத்தில் தனுஷ்?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
4. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் பகத் பாசில்?
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார்.
5. மீண்டும் திகில் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் திரையுலகில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார்.