சினிமா துளிகள்

‘மகாமுனி’ படத்துக்காக அடுத்தடுத்து 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார் + "||" + Magima Nambiar won 2 consecutive international awards for the film ‘Mahamuni’

‘மகாமுனி’ படத்துக்காக அடுத்தடுத்து 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்

‘மகாமுனி’ படத்துக்காக அடுத்தடுத்து 2 சர்வதேச விருதுகளை வென்ற மகிமா நம்பியார்
சர்வதேச பட விழாக்களில் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். 2011-ம் ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்த ‘மகாமுனி’ படத்தை இயக்கினார் சாந்தகுமார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது.


அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற மேட்ரிட் சர்வதேச திரைப்பட விழாவில், மகாமுனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை மகிமா நம்பியாருக்கு, சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு மேலும் ஒரு சர்வதேச விருது கிடைத்துள்ளது. அதன்படி டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில், அவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இந்த திரைப்பட விழாவில், சிறந்த படத்துக்கான விருதையும் மகாமுனி திரைப்படம் வென்றுள்ளது. அடுத்தடுத்து 2 சர்வதேச விருது வென்றுள்ள நடிகை மகிமா நம்பியாருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை மகிமாவுக்கு சர்வதேச விருது
ஆர்யா நடித்து 2019-ல் வெளியான படம் மகாமுனி. இதில் மகிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2. கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’
கனடா சர்வதேச டென்னிஸ்: கமிலா, மெட்விடேவ் ‘சாம்பியன்’.
3. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள குமரி வீராங்கனை டெல்லி பயணம்
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்காக குமரி வீராங்கனை போலந்து செல்கிறார். இதற்காக இரவோடு இரவாக டெல்லிக்கு புறப்பட்டார்.
4. 17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’
17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’.