கோயிலில் வைத்து ‘அப்படியொரு’ கேள்விகேட்ட செய்தியாளர்.... கடுப்பாகி திட்டிய சமந்தா


கோயிலில் வைத்து ‘அப்படியொரு’ கேள்விகேட்ட செய்தியாளர்.... கடுப்பாகி திட்டிய சமந்தா
x
தினத்தந்தி 20 Sep 2021 6:03 PM GMT (Updated: 20 Sep 2021 6:03 PM GMT)

தெலுங்கு ஊடக செய்தியாளரை நடிகை சமந்தா திட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் சாகுந்தலம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை சமந்தாவுக்கும், அவரது கணவர் நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள் என்ற வதந்தி வெகுநாட்களாகவே உலவுகிறது.

இந்நிலையில், திருப்பதி கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவிடம் தெலுங்கு ஊடக செய்தியாளர் ஒருவர், உங்களைப் பற்றி வதந்திகள் வந்து கொண்டிருக்கிறதே எனக் கேட்டதற்கு, “கோயிலுக்கு வந்து இதைக் கேக்குறீங்களே, புத்தி இருக்கா?” என்று கோபமாக பதிலளித்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story