வலிமை படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்.... இணையத்தில் வைரலாகிறது


வலிமை படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ் போஸ்டர்.... இணையத்தில் வைரலாகிறது
x
தினத்தந்தி 21 Sep 2021 5:57 PM GMT (Updated: 2021-09-21T23:27:56+05:30)

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்திகேயா. இவர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திகேயாவுக்கு, ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ‘வலிமை’ படக்குழு சர்ப்ரைஸ் போஸ்டரை வெளியிட்டுள்ளது. கார்த்திகேயாவின் வில்லன் தோற்றத்துடன் கூடிய இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Next Story