திரைப்படங்கள் தியேட்டர்களில் தான் ரிலீசாக வேண்டும் - நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம்


திரைப்படங்கள் தியேட்டர்களில் தான் ரிலீசாக வேண்டும் - நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம்
x
தினத்தந்தி 21 Sep 2021 6:04 PM GMT (Updated: 21 Sep 2021 6:04 PM GMT)

திரைப்படங்கள் வெளியானால் தான் திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: “நான் நடித்த டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் 9-ந் தேதி வெளியாகிறது. திரைப்படங்கள் எப்போதும் தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்பது தான் எனது ஆசை. திரையங்குகளில் நான் படம் பார்த்து வளர்ந்தவன் என்பதே அதற்கு காரணம். தற்போதுள்ள காலச்சூழலில் எனது தனிப்பட்ட சிந்தனையை மட்டும் இதில் திணிக்க முடியாது.

ஓடிடி தளங்களை பொறுத்தவரை அவற்றில் உள்ள நல்ல வி‌ஷயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன். நடிகர்கள் சேர்ந்து இவ்விவகாரத்தில் யாருக்கு எதிராகவும், சாதகமாகவும் முடிவு எடுக்க முடியாது. படங்கள் ஏதோ ஒரு வகையில் வெளியாக வேண்டும். அப்போது தான் திரைத்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.

பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தியேட்டர்களுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது தியேட்டர்களில் பொதுமக்கள் திரைப்படத்தை காண்பதற்கான வசதிகள் மேம்பட்டுள்ளன.

திரைப்படங்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது நல்ல வி‌ஷயம். ஆனால் தமிழ் தலைப்புகள் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அதோடு தற்போது தற்போது படங்கள் ஓடிடி தளங்கள் வாயிலாக பிற இடங்களில் வெளியாகின்றன. அத்தகைய சூழலுக்கு தகுந்தவாறும் சில நேரங்களில் முடிவு எடுக்கப்படுகின்றன”. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story