‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக இணைந்த ‘ரவுடி பேபி’ காம்போ


‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக இணைந்த ‘ரவுடி பேபி’ காம்போ
x
தினத்தந்தி 21 Sep 2021 6:19 PM GMT (Updated: 21 Sep 2021 6:19 PM GMT)

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் தனுஷின் 44-வது படம் ‘திருச்சிற்றம்பலம்’. மித்ரன் ஜவகர் இயக்கி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடன இயக்குனராக ஜானி பணியாற்றி வருகிறார். ஏற்கனவே தனுஷுடன் இணைந்து ‘மாரி 2’ படத்தில் பணியாற்றிய ஜானி தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் இணைந்துள்ளார். ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலுக்கு பிரபுதேவாவுடன் இணைந்து ஜானி நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story