அப்படியேவா காப்பி அடிக்குறது.... சர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்


அப்படியேவா காப்பி அடிக்குறது.... சர்ச்சையில் சிக்கும் யோகிபாபு படம்
x
தினத்தந்தி 22 Sept 2021 11:38 PM IST (Updated: 22 Sept 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வரும் யோகிபாபுவின் புதிய திரைப்படம் ஒன்று சர்ச்சையில் சிக்கியுள்ளது.

யோகிபாபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பேய் மாமா’. சக்தி சிதம்பரம் இயக்கி உள்ள இப்படத்தில் மாளவிகா மேனன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் ஏலப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இதற்கான போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர் பாலிவுட் திரைப்படம் பூட் (BHOOT) பட போஸ்டரை அப்படியே காப்பி அடித்திருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

மேலும் இரண்டும் போஸ்டர்களையும் ஒப்பிட்டு, யோகிபாபுவின் தலையை மட்டுமே மாற்றியிருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
1 More update

Next Story