கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி


கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை நேரில் சந்தித்த விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 22 Sep 2021 6:12 PM GMT (Updated: 22 Sep 2021 6:12 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், நடிகர் விஜய் சேதுபதியும் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் சமீபத்தில், ’லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகின. மேலும், மாஸ்டர் செப் நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து, “உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா’ என்று உற்சாகமுடன் பதிவு செய்து இருக்கிறார்.

விஜய் சேதுபதியுடன் ஸ்ரீசாந்த் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story