அது ஒரு இம்சை... தனிமையே பேரின்பம் - செல்வராகவன்


அது ஒரு இம்சை... தனிமையே பேரின்பம் - செல்வராகவன்
x
தினத்தந்தி 26 Sept 2021 8:12 PM IST (Updated: 26 Sept 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனிமை பற்றி ஒரு பதிவு செய்திருக்கிறார்.

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை இயக்கினார். தற்போது மீண்டும் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சில கருத்துக்களை பதிவு செய்து வருவார். தற்போது, ‘இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.’ என்று பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
1 More update

Next Story