எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும் - பிரபல தயாரிப்பாளர்


எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும் - பிரபல தயாரிப்பாளர்
x
தினத்தந்தி 30 Sept 2021 5:35 PM IST (Updated: 30 Sept 2021 5:35 PM IST)
t-max-icont-min-icon

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சிங்கம், சிறுத்தை படங்கள் பற்றி பேசி இருக்கிறார்.

பன்றிக்கு நன்றி சொல்லி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக தனஞ்ஜெயன், சி.வி.குமார், நலன் குமாரசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

ஞானவேல் ராஜா பேசும் போது, அட்டகத்தி படம் பத்திரிகையாளர் சந்திப்பு போல் இருக்கிறது. படக்குழுவினரிடம் பழகும் போது கல்லூரி சென்ற அனுபவம் போல் இருந்தது. குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை இயக்கி இருக்கிறார்கள். அட்டகத்தி படத்தில் பணியாற்றிய பா.ரஞ்சித், தினேஷ் ஆகியோருக்கு எப்படி பெரிய படங்கள் வாய்ப்பு கிடைத்ததோ, அதுபோல் பன்றிக்கு நன்றி சொல்லி படக்குழுவினருக்கும் அமையும்.

எனக்கு லைப் கொடுத்தது சிங்கமும் சிறுத்தையும் தான். அதாவது சூர்யா நடித்த சிங்கம், கார்த்தி நடித்த சிறுத்தை படங்கள் தான் எனக்கு நல்ல லாபத்தையும் பெயரையும் கொடுத்தது. அதுபோல் இப்போது பன்றி படம் எனக்கும் படக்குழுவினருக்கும் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்புகிறேன் என்றார்.
1 More update

Next Story