சினிமா துளிகள்

ஒரே நாளில் ஓடிடி-யில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள் + "||" + 2 pictures of Samuthirakani released on ODT in one day

ஒரே நாளில் ஓடிடி-யில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள்

ஒரே நாளில் ஓடிடி-யில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 படங்கள்
இயக்குனரும், நடிகருமான சமுத்திரகனி நடித்துள்ள 2 திரைப்படங்கள் ஒரே நாளில் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.
சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படம் ‘விநோதய சித்தம்’. இப்படத்தில் அவரே முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.


மேலும் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரமேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதேபோல், அன்றைய தினம் சமுத்திரகனி நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ படமும் ஓடிடி-யில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இதன்மூலம் சமுத்திரகனி நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் மோகன்லாலின் 5 படங்கள்
திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, மோகன்லால் நடித்து வரும் 5 படங்களை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
2. தீபாவளி ரேசில் மோதும் 5 படங்கள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னணி நடிகர்கள் ரஜினி, சூர்யா, விஷால், சிம்பு, அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது.
3. அடுத்தடுத்து ஓடிடி-யில் ரிலீஸாகும் சசிகுமாரின் 2 படங்கள்
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சசிகுமார், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், எம்.ஜி.ஆர்.மகன், உடன்பிறப்பே போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
4. பண்டிகையில் ரிலீசாகும் பெரிய நடிகர்கள் படங்கள்
பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களையும் வெளியிடும்படி ஏற்கனவே தயாரிப்பாளர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
5. கமல் நடிக்கும் 5 படங்கள்
கமல்ஹாசன் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.