லெஜண்ட் சரவணன் பட நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்


லெஜண்ட் சரவணன் பட நடிகைக்கு கோல்டன் விசா வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்
x
தினத்தந்தி 1 Oct 2021 4:01 PM GMT (Updated: 1 Oct 2021 4:01 PM GMT)

நடிகை ஊர்வசி ராவ்துலா, தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்துலாவுக்கு  விசா வழங்கி உள்ளது. இவர் தற்போது தமிழில் உருவாகும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Next Story