சினிமா துளிகள்

பீஸ்ட் அப்டேட் எப்போ ரிலீஸ் ஆகும்? - இயக்குனர் நெல்சன் விளக்கம் + "||" + When is the Beast update released? - Director Nelson Description

பீஸ்ட் அப்டேட் எப்போ ரிலீஸ் ஆகும்? - இயக்குனர் நெல்சன் விளக்கம்

பீஸ்ட் அப்டேட் எப்போ ரிலீஸ் ஆகும்? - இயக்குனர் நெல்சன் விளக்கம்
நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


அப்போது இயக்குனர் நெல்சனிடம், ரசிகர் ஒருவர் பீஸ்ட் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டார். இதற்கு பதிலளித்த நெல்சன், டாக்டர் படம் ரிலீசானதும், பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறினார். அது என்ன அப்டேட் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பீஸ்ட் படத்தையும் நெல்சன் தான் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘துப்பறிவாளன் 2’ மீண்டும் தொடங்குவது எப்போது? - விஷால் விளக்கம்
கடந்த ஓராண்டாக ‘துப்பறிவாளன் 2’ குறித்து எந்தவித தகவலையும் வெளியிடாமல் இருந்த விஷால், தற்போது அதுகுறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
2. வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் விளக்கம்
வரலாற்று திரிபை சரிசெய்யும் நோக்கிலேயே தமிழ்நாடு நாள் குறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் தெரிவித்துள்ளார்.
3. உடல்நலம் பாதிப்பா? - நடிகர் ராமராஜன் தரப்பு விளக்கம்
பிரபல நடிகரும், இயக்குனருமான ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.
4. அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்
தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
5. மீண்டும் நெல்சன் உடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன்?
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வரும் நெல்சன், அதன்பின் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.